கன்னட தேவாங்கர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்காக கடந்த 2013-ம் ஆண்டு முதல் “ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் நற்பணி மன்றம்” என்ற பெயரில் திருணத்திற்கு தயாராக உள்ள ஆண் / பெண் வரன்களின் தகவல்களை பதிவு செய்து தேவையான மக்களுக்கு, சேவை செய்யும் நோக்கத்துடன் இலவசமாக வழங்கி வருகின்றோம்.

சேலம் மாநகரின் பல பகுதிகளை சேர்ந்த 21 தன்னார்வ தொண்டர்கள் இந்த சேவையை செய்து வருகிறோம். இந்த சேவைக்கு உறுதுணையாக இட வசதி ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் “ஸ்ரீ விஜயலட்சுமி மஹால் திருமண மண்டபம்” 32/1 சின்னுசாமி நகர் மெயின் ரோடு, (தரண் மருத்துவமனை பின்புறம்), சீலநாயக்கன்பட்டி பைபாஸ், சேலம் - 636 201.

மக்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டு மேற்படி “ஸ்ரீ விஜயலட்சுமி மஹால் திருமண மண்டபம்” -த்தில் ஆண் / பெண் வரன்களின் ஜாதகம், மற்றும் சமூக அந்தஸ்து சம்பந்தமான அனைத்து தகவல்களையும் வரன் தேடும் மக்களுக்கு வழங்கி அவர்கள் பயன்பெற உதவுகிறோம்.

ஓர் ஆண்டிற்கு வரன் தகவல்களை பதிவு செய்து விநியோகிக்க மிக குறைந்த கட்டணம் ரூ.201/- மட்டும் பெறப்படுகிறது.

நாங்கள் இதுவரை சுமார் 6000 ஆண் / பெண் வரன்களின் தகவல்களை தேவையானவர்களுக்கு வழங்கியதில் சுமார் 3100 நபர்கள் வாழ்க்கை துணைகளை தேர்வு செய்து பயனடைந்துள்ளனர்.

இந்த சேவை பிரதி வெள்ளிக்கிழமைகளிலும், அமாவாசை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மேற்படி “ ஸ்ரீ விஜயலட்சுமி மஹால் திருமண மண்டபம்” -த்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு வேலை நாளிலும் சுமார் 300 – 400 வரன்களின் பெற்றோர்கள் நேரில் வந்து பார்த்து ஜாதக நகல்கள் பெற்றுக் கொள்வதுடன், ஒருவருக்கொருவர் கலந்துரையாடல் செய்து பயன்பெறுகின்றனர்.

2019 ஜனவரி முதல் அழகிரிசாமி விஜயலட்சுமி அறக்கட்டளை (32/1, சின்னுசாமி நகர் மெயின் ரோடு தரண் மருத்துவமனை பின்புறம், சீலநாயக்கன்பட்டி பைபாஸ், சேலம்-636 201) சார்பில் “நிம்மதி இல்லம்” எனும் முதியோர் மற்றும் பணிக்கு செல்லும் மகளிர்க்கான இல்லம் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.
இணையதள முகவரி www.nimmathi.in

மேலும் அழகிரிசாமி விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில் தினசரி மதியம் 1.00 மணியளவில் அன்னதானம் செய்யப்படுகிறது. இடம் : ஸ்ரீ விஜயட்சுமி மஹால், சேலம்- 636 201.
இணையதள முகவரி www.asvlct.org

இந்த அன்னதான திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், தங்களது பிறந்தநாள், திருமண நாள், முன்னோர்களின் நினைவு நாள், பண்டிகை நாட்கள் மற்றும் தாங்கள் விரும்பும் நாட்களில் அன்னதானம் செய்ய பணமாகவோ, பொருட்களாகவோ, உணவாகவோ கொடுக்கலாம்.

தொடர்புக்கு. 93452 40133. / 98942 78185

logo